இரு சக்கர வாகனங்களை திருடி வந்த வாலிபர் கைது

Update:2023-02-08 00:30 IST

தானே, 

தானே மாவட்டம் காஷிமிரா மற்றும் கிராம பகுதிகளில் அடிக்கடி இரு சக்கர வாகனங்கள் திருட்டு போவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரித்து வந்தனர். இதில் ஒரு வாலிபரின் அடையாளம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இவர் மீது காஷிமிரா நவ்கர், மிராரோடு, துலின்ஞ் மற்றும் டி.என் நகர் போலீஸ் நிலையங்களில் வாகன திருட்டு தொடர்பாக ஏற்கனவே வழக்குகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது. போலீசார் அவரிடம் இருந்த 10 திருட்டு மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் ஆகும்.

மேலும் செய்திகள்