ரூ.7 லட்சம் கள்ளநோட்டுகளுடன் வாலிபர் கைது
மும்பையில் கள்ளநோட்டு அச்சடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.7 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.;
மும்பை,
மும்பையில் கள்ளநோட்டு அச்சடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.7 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.7 லட்சம் கள்ளநோட்டு
மும்பை மான்கூர்டு பகுதியில் ஒருவர் கள்ளநோட்டு அச்சிடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மான்கூர்டு, ஜோதிர்லிங்க் பகுதியில் உள்ள கட்டிடத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கள்ளநோட்டு அச்சடிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது.
போலீசார் அங்கு இருந்து கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்திய பிரின்டர், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். ரூ.7 லட்சம் கள்ளநோட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
வாலிபர் கைது
மேலும் கள்ளநோட்டுகளை அச்சடித்த காந்திவிலி பகுதியை சேர்ந்த விற்பனை பிரதிநிதியாக வேலைபார்க்கும் ரோகித் ஷாவை (வயது22) கைது செய்தனர்.
வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர் இதுவரை எவ்வளவு கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டு உள்ளார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.