தானே,
கல்யாண் ரெயில் நிலையத்தை யொட்டி ஆகாய நடைமேம்பாலம் உள்ளது. இந்த நடைமேம்பாலத்தில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர் பீட் மாவட்டத்தை சேர்ந்த வித்தல் மிசல்(வயது25) எனவும்,முன்னதாக அவர் தனது குடும்பத்தினருக்கு போன் செய்து, தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறிவிட்டு வந்தது தெரியவந்தது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.