‘துர்நாற்ற’ மலரைக் காண குவியும் கூட்டம்
சுவிட்சர்லாந்தில் மலர்ந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய, கடும் துர்நாற்றம் வீசும் பூவைக்காண கூட்டம் குவிந்து வருகிறது.;
‘டைட்டான் ஆரம்’ எனப்படும் அந்த மலர், சுவிட்சர்லாந்தின் சூரிச் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பூங்காவில் மலர்ந்திருக்கிறது.
சுமத்ரா தீவை பிறப்பிடமாகக் கொண்ட இந்த மலரின் தாவரவியல் பெயர், ‘அமோர்போபாலஸ் டைட்டானம்’ என்பதாகும். இது உலகிலேயே பெரிய மலர் என்பதுடன், மூக்கைப் பொத்தவைக்கும் கடும் துர்நாற்றமும் கொண்டது.
அழுகிய மாமிசத்தின் நாற்றம் கொண்ட, சுமார் மூன்றடி உயரம் வரை வளரும் இந்த மலர், மகரந்தச்சேர்க்கைக்காக வண்டுகளைக் கவர்ந்திழுக்கக்கூடியது.
சுமார் ஒரு வார காலத்துக்கு மலர்ந்திருக்கும் இந்த மலரின் ‘மணம்’ குறையத் தொடங்கியிருந்தாலும், மக்கள் தொடர்ந்து இதைப் பார்த்து வருகின்றனர்.
இந்த மலர், பூமிக்கடியில் இருக் கும் ஒரு கிழங்கில் இருந்து நேரடியாகப் பூக்கக்கூடியது. குறிப்பிட்ட கிழங்கின் எடை 25 கிலோவாக இருந்தால் மட்டுமே இந்த மலர் மலரும்.
இதற்குமுன் கடந்த 2014-ம் ஆண்டு ஒரு ‘துர்நாற்ற மலர்’, சுவிட்சர்லாந்தின் பேசல் பல்கலைக்கழகத் தாவரவியல் பூங்காவில் பூத்தது.