சுலபமாகவும், சுத்தமாகவும் துவைக்க உதவும் நவீன வாஷிங் மெஷின்கள்

வீடுகளில் துணிகளை கைகளால்தான் துவைத்துக் கொண்டிருந்தார்கள்.;

Update:2019-05-04 15:22 IST
ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் பெரும்பாலான வீடுகளில் துணிகளை கைகளால்தான் துவைத்துக் கொண்டிருந்தார்கள். பிறகு டிரம் போன்ற வடிவில் வெறும் துவைக்கும் வேலையை மட்டும் செய்யும் வாஷிங் மெஷின்கள் வந்தன. பின்பு, துவைப்பதுடன் துணிகளை உலர வைக்கும் ட்ரையர்கள் இணைந்தது போல் செமி ஆட்டோமெடிக் வாஷிங்மெஷின்கள் வந்தன.

அதன் பின்னர், ஃப்ரன்ட் மற்றும் டாப் லோடிங் ஆட்டோமேடிக் (ஃபுல்லி) வாஷிங் மெஷின்கள் வந்தன. இப்பொழுது வாஷிங்மெஷின்கள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லுமளவுக்கு மக்களின் வீட்டு உபயோகப் பொருட்களில் இன்றியமையாத இடத்தை பிடித்து விட்டன.

நீங்கள் வசிக்கும் ஏரியாவில் தண்ணீர் பிரச்சினை இல்லையென்றால் கட்டாயம் உங்கள் சாய்ஸ் ஃப்ரன்ட் லோடிங் வாஷிங் மெஷினாகத்தான் இருக்கும்.

ஃப்ரன்ட் லோடிங் வாஷிங் மெஷின்கலைப் போலவே பல சிறப்பு அம்சங்களை டாப்லோடிங் வாஷிங் மெஷின்களும் கொண்டுள்ளன. சுடூநீர் மற்றும் குளிர்ந்த நீரில் துணிகலை துவைக்கும் வசதி ஃப்ரன்ட் மற்றும் டாப் லோடிங் வாஷிங்மெஷின்களில் இருக்கும் சிறப்பு அம்சங்களாகும். மிகச்சிறிய அளவிலிருந்து மிகப்பெரிய அளவு அதாவது பத்து கிலோவிற்கும் அதிகமான துணிகளைத் துவைக்கும் வாஷின்மெஷின்களும் வந்து விட்டன.

ஸ்மார்ட் இன்வெர்டர் தொழில்நுட்பம், இருபுறமும் ட்ரம்கள் சுழலும் வசதியுடனும், மிகக் குறைந்த சத்தம் மற்றும் அதிர்வுடன் இயங்கும் டாப் லோட் வாஷிங்மெஷின்களை மிகப் பிரபலமான நிறுவனங்கள் தயாரித்து விற்பனையில் உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கின்றன. காற்றுக்குமிழ்களானது துணிகளில் படிந்திருக்கும் விடாப்பிடிக் கறைகளை அகற்றும் தொழில்நுட்பம், 3டி முறையில் துணிகளைத் துவைக்கும் தொழில்நுட்பம், ஈக்கோ ட்ரம் கிளனிங் தொழில்நுட்பம் என்று புதுப்புது தொழில்நுட்பங்களை வாஷிங்மெஷின் நிறுவனங்கள் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.

வாஷிங்மெஷின்கள் பராமரிப்பு

* வாஷிங்மெஷின்களை முடிந்தவரை ஒரே இடத்தில் வைத்து உபயோகப்படுத்த வேண்டும்.

* அதன் பயன்பாடு முடிந்ததும் சிரமம் பார்க்காமல் ப்ளக் பாயிண்டிலிருந்து ப்ளக்கை கழற்றி வைத்து விட வேண்டும்.

* குழாயிலிருந்து வாஷிங்மெஷினுக்கு தண்ணீரை உள்ளே அனுப்பும் இடத்தில் இன்லெட் ஃபில்டர் என்ற வடிகட்டி ஒன்று இருக்கும். மாதம் ஒருமுறை இந்த ஃபில்டரை சுத்தம் செய்து விட வேண்டும்.

* வாஷிங்மெஷின்களை அதிக வெயில் படும் இடங்களிலோ, அதிக தண்ணீர் படும் இடங்களிலோ வைக்கக்கூடாது.

* வாஷிங்மெஷினில் அதில் குறிப்பிட்ட அளவின் படியே துணிகளைத் துவைப்பதற்குப் போட வேண்டும். அதிகத் துணிகளை போட்டு அதன் இயக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது.

* தரமான சோப்புத்தூள்களை தேவையான அளவுகளில் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.

* வாஷிங் டிரம்மை சுத்தம் செய்வதற்காக தனிப்பட்ட சோப்புத் தூள்களும், லிக்விட்களும் பரிந்துரைக்கப்படுகின்றன. அவற்றைக் கொண்டு வாஷிங் டிரம்மை ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும்.

* ஃபில்டர்களில் அடைப்பு ஏற்பட்டால் அவற்றை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால் தண்ணீர் உட்செல்வது மற்றும் வெளியேறுவதில் பிரச்சினை ஏற்படும்.

* அதேபோல் சோப்புத் தூள் மற்றும் சோப்புத் திரவும் போடும் டிராயரை மாதம் ஒருமுறை சுத்தம் செய்து வந்தால் அதில் பழைய சோப்புத்தூள் சேர்ந்து அடைத்துக் கொள்வதைத் தவிர்க்கலாம்.

* துணி துவைத்த பிறகு வாஷிங் மெஷின் மூடியைத் திறந்து வைப்பதன் மூலம் காற்று உட்புறம் சென்று துர்நாற்றம் வீசுவதை தடுக்கும்.

மேலும் செய்திகள்