போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 104 பேருக்கு அபராதம்

போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 104 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;

Update:2022-10-27 21:02 IST

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தம் பகுதியில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல், ஓட்டுனர் உரிமம் இல்லாமல், செல்போன் பேசியபடி வாகன ஓட்டியவர்களை மடக்கி அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 104 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.80 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்