குமரியில் 15 கலைஞர்களுக்கு விருது

குமரியில் 15 கலைஞர்களுக்கு விருதை கலெக்டர் அரவிந்த் வழங்கினார்.;

Update:2022-09-08 23:23 IST

நாகர்கோவில்:

குமரியில் 15 கலைஞர்களுக்கு விருதை கலெக்டர் அரவிந்த் வழங்கினார்.

குமரி மாவட்ட கலை பண்பாட்டுத்துறை சார்பில் சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. விழாவில் கலெக்டர் அரவிந்த் பங்கேற்று சிறந்த கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

தமிழக அரசு மாவட்ட கலை மன்றங்கள் மூலமாக ஆண்டுதோறும் சிறந்த 15 கலைஞர்களுக்கு கலை இளமணி, கலை வளர்மணி, கலை சுடர்மணி, கலை நன்மணி, கலை முதுமணி உள்ளிட்ட விருதுகளை வழங்கி வருகிறது. அதனடிப்படையில் வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் துர்காதேவி (வயலின்), ஜெயஸ்ரீ (நடனம்), தீரஜ் (பாட்டு) ஆகியோர் கலை இளமணியாகவும், சிவின்ஸ் (ஓவியம்), ஸ்டாலின் ஜோஸ் (சிலம்பம்), விவேக் (சிற்பம்) ஆகியோர் கலை வளர்மணியாகவும், திலகவதி (வாய்ப்பாட்டு), கிருஷ்ணன் (நாதஷ்வரம்), ஜிஷா (மரபு ஓவியம்) ஆகியோர் கலை சுடர்மணியாகவும், சுகுமாரன் (விளக்கு கெட்டு கலைஞர்), ராஜசேகரன் (ஓவியம்), முத்துக்கோபால் (தோல்பாவை கூத்து) ஆகியோர் கலைநன்மணியாகவும், கணேசன் (வில்லிசை குடம்), வேலப்பன் (சிலம்பம்), தேவதாஸ் (நடனம்) ஆகியோர் கலைமுதுமணியாகவும் தேர்வு செய்யப்பட்டனா். இவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, பொற்கிழி விருது மற்றும் பட்டயம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் திருநெல்வேலி மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனா்.

Tags:    

மேலும் செய்திகள்