வாலிபர்கள் மீது தாக்குதல் 2 பேர் கைது

திண்டிவனம் பகுதியில் வாலிபர்கள் மீது தாக்குதல் 2 பேர் கைது;

Update:2022-11-11 00:15 IST

திண்டிவனம்

திண்டிவனம் பூதேரி பகுதி ராஜன் நகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் பிரகாஷ்(வயது 26). இவர் சம்பவத்தன்று திண்டிவனத்தில் இருந்து தனது நண்பர் விக்னேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பூதேரி மாரியம்மன் கோவில் அருகே உள்ள பெரிய வாய்க்கால் பகுதியில் சென்றபோது அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் சிலர் சாலையின் குறுக்கே இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்து பேசிக்கொண்டிருந்தனர். இதை தட்டிக்கேட்ட பிரகாஷ், விக்னேஷ் இருவரையும் அவர்கள் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் இது குறித்த புகாரின் பேரில் பூதேரி கிராமம் வெங்கடேசன் மகன் மாரிமுத்து(22), சதீஷ்(19), ஏழுமலை மகன் பிரவீன்(23), தங்கராசு மகன் விக்னேஷ் (22) ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவுசெய்த போலீசார் மாரிமுத்து, சதீஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்