வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுதுறையில் தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணை உள்ளது. இங்கு நேற்று இரவு மர்மநபர்கள் புகுந்து ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள இறாலை திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து இறால் பண்ணை மேற்பார்வையாளர் கணேசமூர்த்த்தி வேதாரண்யம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து இறால் திருடிய அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி(வயது40), செல்வம்(42) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.