நகைக்கடை, துணிக்கடையில் ஜி.எஸ்.டி. வரி அமல்

நகைக்கடைகள் மற்றும் துணிக்கடைகளில் ஜி.எஸ்.டி. வரி உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.;

Update:2017-07-02 01:36 IST
சென்னை,

நகைக்கடைகள் மற்றும் துணிக்கடைகளில் ஜி.எஸ்.டி. வரி உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அதன்படி நகைக்கடைகளில் செய்கூலி, சேதாரத்துடன் வாங்கும் நகையில் ஜி.எஸ்.டி. வரியும் புதிதாக இணைக்கப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் நேற்று தங்கம் ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்து 758-க்கும், பவுன் ரூ.22 ஆயிரத்து 64-க்கும் விற்பனையானது.

உதாரணத்துக்கு ஒரு பவுன் தங்க நகையை 6.5 சதவீத சேதாரத்துடன் வாங்கும் போது ரூ.23 ஆயிரத்து 447 வருகிறது. அதனுடன் 3 சதவீத ஜி.எஸ்.டி. வரியாக ரூ.703-ம் சேர்ந்து, ஒரு பவுன் தங்க நகை ரூ.24 ஆயிரத்து 150-க்கு விற்பனை ஆகிறது.

அதேபோல நூல் மற்றும் காட்டன் துணிகளுக்கு 5 சதவீதமும், ரெடிமேட் துணி வகைகளுக்கு 12 சதவீதமும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. பெரிய துணிக்கடைகளில் இந்த ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமலாகி உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ‘பில்’களிலும் இது பதிவாகி இருக்கிறது.

ஆனால் பெரும்பாலான துணிக்கடைகளில் இந்த நடைமுறை இன்னமும் அமல்படுத்தப்படவில்லை.

வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை மையங்களிலும் இன்னமும் இந்த ஜி.எஸ்.டி. வரி அமலாகவில்லை.

மேலும் செய்திகள்