இந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலனுக்கு திடீர் உடல்நலக்குறைவு
இந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.;
கோவை
இந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலன், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பசு பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்ள வந்து இருந்தார். மாநாடு முடிந்ததும், மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு பிரமுகர் வீட்டில் ராமகோபாலன் இரவு தங்கினார்.
இந்தநிலையில் அவருக்கு நேற்று காலை திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. முதுகு தண்டு வடத்தில் பிரச்சினை இருந்தது. சிறுநீர் வெளியேறுவதிலும் சிரமம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலை 10.30 மணிக்கு அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைக்கு பின்னர் பகல் 1.30 மணியளவில் ராமகோபாலன் உடல்நிலை தேறியது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து கார் மூலம் மீண்டும் மேட்டுப்பாளையத்துக்கு சென்றார். அங்கு நடைபெற்ற இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார்.