தமிழகம், புதுச்சேரியில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

வெப்ப சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது.;

Update:2017-07-03 03:00 IST
சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (திங்கட்கிழமை) வெப்ப சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரையில் கேரள மாநிலத்திலும் கர்நாடக மாநில கடலோர பகுதிகளில் பரவலாக பெய்து வருகிறது. ஆனால் ஆந்திரா, தெலுங்கானாவில் ஓரளவு மழை பெய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்த வரையில் ஒரு சில இடங்களில் அதிலும் குறிப்பாக கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மட்டும் மழை பெய்து வருகிறது.

தமிழ்நாட்டில் இன்று (திங்கட்கிழமை) ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில்(அதாவது இன்று) வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்த வரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாநகரில் மாலையோ அல்லது இரவிலோ சில பகுதிகளில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது.

நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் 2 சென்டி மீட்டரும், புதுக்கோட்டை, விழுப்புரம், திருமயம், பெரியார் அணை, ஸ்ரீமுஷ்ணம், ஆயக்குடி, சின்னக்கல்லாரில் தலா 1 சென்டி மீட்டரும் மழை பெய்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்