மாநில செய்திகள்
ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா - அஸ்வின் தம்பதியருக்கு விவாகரத்து வழங்கியது சென்னை குடும்ப நல நீதிமன்றம்

ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா - அஸ்வின் தம்பதியருக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.
சென்னை,

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபர் மகன் அஸ்வினுக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சௌந்தர்யாவுக்கும் அஸ்வினுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து  சௌந்தர்யா, அஸ்வினைப் பிரிந்தே வாழ்ந்து வந்து வந்தனர்.  

இந்த நிலையில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கோரி இருவரும் கடந்த டிசம்பர் மாதம் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.  இந்து திருமண சட்டத்தின்படி 6 மாத அவகாசத்திற்கு பின் சௌந்தர்யா - அஸ்வின் தம்பதியருக்கு விவாகரத்து வழங்கப்பட்டது.