சென்னை கே.கே.நகரில் மாணவி அஸ்வினி கொலைக்கான பின்னணி என்ன?

சென்னையில் கல்லூரி வாசலில் மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது ஏன் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2018-03-09 10:59 GMT
சென்னை

சென்னை கே கே நகரில்  உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம்  முதல் ஆண்டு படித்து வந்தவர்  அஸ்வினி .  இன்று மாலை கல்லூரி முடிந்து  வீட்டிற்கு செல்வதற்காக கல்லூரி வாசலில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த  வாலிபர் ஒருவர்  மாணவி அஸ்வினியை சரமாறியாக கத்தியால் குத்தினார்.  பின்னர் மாணவியின் கழுத்தை அறுத்து உள்ளார். இதில் மாணவி   ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனடியாக அவரை அங்குள்ளவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  மாணவியை கத்தியால் குத்திய  வாலிபரை  பிடித்து அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

முதல் கட்ட விசாரணையில்  மாணவி  அஸ்வினியை கத்தியால் குத்திய வாலிபர் பெயர்  அழகேசன் என்றும் அவர் மதுரவாயலில் வசித்து வருகிறார்  என்றும்  தெரியவந்து உள்ளது. அழகேசன் சுகாதாரதுறையில் வேலை பார்த்து வருகிறார். 

அஸ்வினிக்கும்  அழகேசனுக்கும் கடந்த  மாதம் திருமணம் நடந்து உள்ளது. கல்லூரி மாணவி அஸ்வினி ஏற்கனவே அழகேசனை விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். அஸ்வினியின் காதல் திருமணத்தை விரும்பாத பெற்றோர் பிரித்து வைத்து உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளனர் .

பின்னர் இருவரும்  பிரிந்து வாழ்ந்து உள்ளனர்.  இருந்தாலும் தொடர்ந்து சேர்ந்து வாழலாம் என அழகேசன் கூறி வந்து உள்ளார். அழகேசனின் தொல்லை தாங்காத அஸ்வினி இதுகுறித்து மதுரவாயல் போலீசாரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.அதன்பேரில் அழகேசன் மதுரவாயல் போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். 

அழகேசன் தொல்லையிலிருந்து தப்பிக்க அஸ்வினி ஜாபர்கான்பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து கல்லூரிக்குச் சென்று வந்தாகவும் கூறப்படுகிறது.  இந்நிலையில் அஸ்வினி மீது ஆத்திரத்தில் இருந்த அழகேசன் அவரை கல்லூரி வாயிலில் சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளார்.  தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  
Tags:    
Show comments

மேலும் செய்திகள்