கட்சியில் சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும் - மு.க. அழகிரி

கட்சியில் சேர்த்து கொண்டால் ஸ்டாலினை தலைவராக எற்று கொள்ளத்தானே வேண்டும் என மு.க. அழகிரி கூறி உள்ளார்.

Update: 2018-08-30 07:48 GMT
மதுரை,

மு.க. அழகிரி வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து கருணாநிதியின் நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடத்த உள்ளார். இதில் ஒரு லட்சம் பேர் வரை திரட்டிக் காட்டுவதற்கான நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

இதற்காக தினமும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இன்றும் அவர் 7-வது நாளாக ஆலோசனையில் ஈடுபட்டார்.

மு.க அழகிரி கூறியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவே செப்டம்பர் 5ஆம் தேதி பேரணி நடைபெறவுள்ளது என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். மேலும் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வானது பற்றி கருத்து கூற ஒன்றுமில்லை .

தி.மு.கவில் எங்களை சேர்த்து கொண்டால் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம். கட்சியில் சேர்த்து கொண்டால் ஸ்டாலினை தலைவராக எற்று கொள்ளத்தானே வேண்டும். கட்சியில் சேர்த்துக் கொள்ளாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை  குறித்து ஆலோசிக்கப்படும். 

பொதுக்குழு மட்டுமே தி.மு.க அல்ல அதில் 1500 பேர் மட்டுமே உள்ளனர். என கூறினார். 

மேலும் செய்திகள்