மாநில செய்திகள்
சிறார்கள் நலன் மற்றும் பாதுகாப்பில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி

சிறார்கள் நலன் மற்றும் பாதுகாப்பில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி விஜய கமலேஷ் தஹில் ரமணி கூறி உள்ளார்.
சென்னை

சென்னை- கெல்லீஸ் அரசு குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகள் பல்நோக்கு வள மையத்தை தலைமை நீதிபதி விஜய  கமலேஷ் தஹில் ரமணி  திறந்து வைத்தார். 

நிகழ்ச்சியில் அவர் பேசும் போது,

நாடு முழுவதும் சிறார்கள் மீது 30 லட்சம் வழக்குகள் உள்ளன. 35 மில்லியன் இந்திய சிறுவர்களுக்கு அன்பும், அரவணைப்பும் தேவைப்படுவதாக ஆய்வு சொல்கிறது.

சிறார்கள் நலன் மற்றும் பாதுகாப்பில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதன்முதலில் சிறுவர்களுக்கான சட்டம் இயற்றப்பட்டது என கூறி உள்ளார்.