ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்போலோவுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடும் கண்டனம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்போலோவுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. #ArumugasamyCommission

Update: 2018-09-06 12:10 GMT
சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் விசாரணை ஆணைத்திற்கு அப்போலோ நிர்வாகம் சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக  அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஆறுமுகசாமி ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அப்போலோ  குழும தலைவர் பிரதாப் ரெட்டிக்கு ஆறுமுகசாமி ஆணையம் நோட்டீஸில் கூறியிருப்பதாவது:

ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ள போதும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.  விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு தராவிடில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.  விசாரணைக்கு ஆறு பேர் ஆஜராக வேண்டும் . அப்போலோ  மருத்துவர்கள் ஆஜராக வேண்டிய தேதியில் ஆஜராக தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்