2 ஆண்டுக்கு பிறகு மீண்டும் தீவிர அரசியலில் இறங்க உள்ளேன் - நடிகர் கார்த்திக் அறிவிப்பு

2 ஆண்டுக்கு பிறகு மீண்டும் தீவிர அரசியலில் இறங்க உள்ளேன் என்று மதுரையில் நடிகர் கார்த்திக் அறிவித்துள்ளார். #Karthik

Update: 2018-09-06 15:39 GMT
சென்னை,

திரை உலகில் மூத்த நடிகரான மறைந்த முத்துராமனின் மகன் நடிகர் கார்த்திக். முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த இவருக்கு, அந்த சமுதாயத்தில் ஒரளவு செல்வாக்கு உண்டு.  இதை வைத்து 7 ஆண்டுகளுக்கு முன் பார்வர்டு பிளாக் கட்சியில் சேர்ந்தார். பின்னர் அக்கட்சியின் தமிழக மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.  கட்சியில் சரியாக பணியாற்றாமல் அடிக்கடி தலைமறைவானதால் பார்வர்டு பிளாக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து 2009-ல் நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியை தொடங்கினார்.   அதே ஆண்டில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு 15000 வாக்குகள் பெற்றார். பின்னர் 2011ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 

இந்தநிலையில் மதுரையில் நடிகர் கார்த்திக்  செய்தியார்களிடம் கூறியதாவது:

2 ஆண்டுக்கு பிறகு மீண்டும் தீவிர அரசியலில் இறங்க உள்ளேன்.  இன்னும் 3 நாட்களுக்கு பின் கட்சியின் பெயரில் சிறிய மாற்றமும், நிர்வாகிகள் மாற்றமும் செய்து மதுரையில் அறிவிக்க திட்டமிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து விலகியிருந்த கார்த்திக் தற்போது கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத அரசியல் களத்தில் மீண்டும் குதிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்