ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனைக்கு விசாரணை ஆணையம் சரமாரி கேள்வி

ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் மரணமடைந்தது வரையிலான சிசிடிவி காட்சிகளை அளிக்க வேண்டும் விசாரணை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

Update: 2018-09-07 12:22 GMT
சென்னை

ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நல குறைபாடுகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை அப்பல்லோவில் தொடர்ந்து 75 நாள்கள் சிகிச்சை பெற்ற அவர் டிசம்பர் 5-ஆம் தேதி காலமானார்.

இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து கடந்த செப்டம்பர் 25ம் தேதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த விசாரணை ஆணையம் முன்னாள் தலைமை செயலாளர் உட்பட பலரிடமும் விசாரணை செய்தது.

இந்த நிலையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் மரணமடைந்தது வரையிலான சிசிடிவி காட்சிகளை அளிக்க வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி கமிஷன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

செப். 22-ல் பேஸ்மேக்கர் பொருத்தப்படும் நிலையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு காய்ச்சல், நீர்ச்சத்து குறைவு என செய்திக்குறிப்பு வெளியிட்டது ஏன்?  அவ்வாறு செய்திக்குறிப்பை வெளியிட சொன்னது யார், அதற்கு யார் ஒப்புதல் வழங்கியது ?  சிகிச்சையின் போது சிசிடிவி காட்சி பதிவுகளை நிறுத்த சொன்னது யார் என ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சரமாரி கேள்வி எழுப்பியது.

ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டபோது நீர்ச்சத்து குறைபாட்டால் பாதிப்பு என அறிக்கை தர காரணமென்ன?

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இறந்தது வரையிலான சிசிடிவி காட்சிகள் தேவை. 7 நாட்களில் சிசிடிவி காட்சி பதிவுகளை அப்போலோ மருத்துவமனை வழங்க ஆறுமுகசாமிஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்