மாநில செய்திகள்
தமிழகத்தில் அரிசி விலை வரலாறு காணாத வீழ்ச்சி

கர்நாடகாவில் பருவமழை அதிகரிப்பால், தமிழகத்தில் அரிசி விலை வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது.
சென்னை,

இந்தியாவின் தென் மாநிலங்களான கர்நாடகா, கேரளாவில் இந்த ஆண்டு அதிக அளவில் தென்மேற்கு பருவமழை பெய்தது. இதில் கேரளாவில் சில இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் அதிக மழை பெய்ததால் இந்த ஆண்டு அரிசி உற்பத்தி அதிகரித்து இருக்கிறது.

மேலும் தென்மேற்கு பருவமழையால் கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, தமிழகத்துக்கு தேவையான நீர் வந்தடைந்தது. இதனால் தமிழகத்திலும் நெல் அறுவடை அதிகரித்தது. இந்த நிலையில் கர்நாடக, ஆந்திரா மாநிலங்களில் இருந்து அரிசி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் அரிசி விலை வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

அதன் அடிப்படையில் தமிழகத்தில் விற்கப்படும் 25 கிலோ மூட்டை அரிசி விலை ரூ.50 முதல் ரூ.100 வரை குறைந்துள்ளது. தமிழகத்தில் ரூ.700-க்கு விற்கப்பட்டு வந்த ஏ.டி.டி. 47 ரக பொன்னி (25 கிலோ) தற்போது ரூ.630 ஆகவும், ரூ.750-க்கு விற்கப்பட்ட கோ.51 பொன்னி ரூ.570 ஆகவும், ரூ.900-க்கு விற்கப்பட்ட டீலெக்ஸ் பொன்னி ரூ.800 ஆகவும் குறைந்துள்ளது.

மேலும் ரூ.1150-க்கு விற்கப்பட்ட ஆந்திரா ஸ்டீம் அரிசி(முதல் ரகம்) ரூ.1050 ஆகவும், ரூ.1000-க்கு விற்கப்பட்ட ஆந்திரா ஸ்டீம் அரிசி(இரண்டாவது ரகம்) ரூ.900 ஆகவும், ரூ.1250-க்கு விற்கப்பட்ட கர்நாடக ஸ்டீம் அரிசி(முதல் ரகம்) ரூ.1150 ஆகவும், ரூ.1100-க்கு விற்கப்பட்ட கர்நாடக ஸ்டீம் அரிசி (இரண்டாவது ரகம்) ரூ.1000 ஆகவும், ரூ.700-க்கு விற்கப்பட்ட இட்லி அரிசி ரூ.600 ஆகவும் குறைந்துள்ளது. மேலும் வரும் மாதங்களில் இன்னும் சரியக்கூடும் என்று தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பி.சொரூபன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘ஆன்லைன்’ வர்த்தகத்தை கண்டித்து தமிழகத்தில் 28-ந் தேதி மருந்து கடைகள் அடைப்பு
‘ஆன்லைன்’ வர்த்தகத்தை கண்டித்து தமிழகத்தில் 28-ந் தேதி மருந்து கடைகள் அடைக்கப்படும் என்று தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2. முழுஅடைப்பு போராட்டம்: தமிழகத்தில் 70 சதவீத லாரிகள் ஓடவில்லை
தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக நேற்று சுமார் 70 சதவீத லாரிகள் ஓடவில்லை என சம்மேளன செயலாளர் தன்ராஜ் கூறினார்.
3. தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் 30-ந்தேதி வரை செயல்படும் தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து 30-ந்தேதி வரை செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
4. தமிழகத்தில் ஒரே நாளில் கூட்டுறவு சங்க தேர்தல்களில் வெற்றி பெற்ற 1,249 பேர் பதவி ஏற்பு
தமிழகத்தில் ஒரே நாளில், கூட்டுறவு சங்க தேர்தல்களில் வெற்றி பெற்ற 1,249 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர்.
5. தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை இருக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல்
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 4 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.