7 பேர் விடுதலை - அமைச்சரவை கூட்டத்தில் முடிவு: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. #RajivCaseConvicts

Update: 2018-09-09 15:04 GMT
சென்னை,

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

இந்தநிலையில்  7 பேர் விடுதலை தொடர்பான கருத்து குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கூறியிருப்பதாவது:

# 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்

 # பேரை விடுதலை செய்வது, எதிர் காலத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் - தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர்

# பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விரைவாக விடுதலை செய்ய வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

# 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் பரிந்துரையை மனப்பூர்வமாக வரவேற்று பாராட்டுகிறேன் - திருமாவளவன் 

# பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கான காலம் கனிந்துவிட்டது - அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன்

# 7 பேர் விடுதலை ஒட்டுமொத்த தமிழகத்தின் முடிவு; ஆளுநர் காலம் தாழ்த்தாமல் பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

# 7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை பரிந்துரையை ஆளுநர் காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும் - பழ.நெடுமாறன்

# 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் - இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்

மேலும் செய்திகள்