பாரத் பந்த்: தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்தை மக்கள் புறக்கணித்துள்ளனர் - பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்தை மக்கள் புறக்கணித்துள்ளனர் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #PonRadhakrishnan

Update: 2018-09-10 16:08 GMT
சென்னை,

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடந்தது. டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடந்த கண்டன கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமை தாங்கினார். சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்பட காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கலந்துக்கொண்டார்கள்.

இந்தநிலையில் காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் குறித்து மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் கூறியதாவது:

தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டத்தை மக்கள் புறக்கணித்துள்ளனர்.  இதன் மூலம் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு என்ன என்பது தெரிந்துவிட்டது.  பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவது மத்திய அரசின் வேலை இல்லை. அனைத்து மாநில அமைச்சர்கள் கொண்ட ஜிஎஸ்டி குழுதான் முடிவெடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்