பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் மத்திய அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் மத்திய அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

Update: 2018-09-10 20:08 GMT
சென்னை, 

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெட்ரோல் ரூ.83.91, டீசல் ரூ.76.98, மானியம் மற்றும் மானியம் அல்லாத சமையல் எரிவாயு ரூ.484.67, ரூ.770.50 விலை உயர்வு இதுவரைக்கும் இல்லாத அளவு, இமாலய உச்சத்தின் அளவு உயர்ந்திருக்கிறது. இந்த விலை உயர்வை தே.மு.தி.க. சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன். இன்றைக்கு சாமானிய மக்கள் முதல் பெரும் தொழிற்சாலைகள் வரை இந்த விலை உயர்வு பாதிக்கும். ஏனென்றால் மிக முக்கியமான பெட்ரோல், டீசல் விலை உயர்வை வைத்துத்தான் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது.

மத்திய அரசு இந்திய எண்ணெய் நிறுவனத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் 6 மாதம் அல்லது வருடத்திற்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏற்றப்பட்டிருக்கும். மத்திய அரசு இந்திய எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயித்துக்கொள்ளலாம் என்று அனுமதி தந்ததன் விளைவு, இன்று தினந்தோறும் விலையை ஏற்றிக்கொண்டே போகிறது.

இதற்கு மத்திய அரசு இந்த விலை உயர்வை திரும்பப்பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு மேலும், மேலும் சுமையை அதிகரிக்காமல் அவர்கள் வாழ்வாதாரத்திற்கு வழிசெய்ய வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துணை போகாமல், சாமானிய மக்களின் நிலையை அறிந்து, இந்த விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்