அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்... பேராசிரியரை கலாய்த்து வீடியோ வெளியிட்ட மாணவர்கள் சஸ்பெண்ட்

அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்... நகைச்சுவை காட்சிகளுடன் பேராசிரியரை கலாய்த்து வீடியோ வெளியிட்ட மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2019-02-09 08:10 GMT
சேலம்

அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்... என்ற நடிகர் வடிவேலுவின் ஊத்தாப்பம் காமெடி ரொம்ப பிரபலம், சேலத்தை சேர்ந்த  அரசு கல்லூரி மாணவர்கள்  பேராசிரியர் பாடம் நடத்தும் காட்சிகளோடு இணைத்து இந்த காமெடி வீடியோ வெளியிட்டு உள்ளனர். இதனால் 3  மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் பாடம் நடத்துவதை செல்போனில்  வீடியோவாக பதிவு செய்த மாணவர்கள், அதை வடிவேலுவின் ஊத்தாப்பம் நகைச்சுவைக் காட்சியின் ஆடியோவுடன் இணைத்து அதை சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.

இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் புகார் கொடுக்கப்பட்டது. புகாரை அடுத்து தமிழ்துறையைச் சேர்ந்த மாணவர்கள் 3 பேரை ஒரு மாதத்திற்கு கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

மேலும் செய்திகள்