டார்ச் லைட்டை தனது சின்னமாக வைத்திருந்தும், கமலுக்கு பார்வைக் கோளாறு உள்ளதோ? தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி

டார்ச் லைட்டை தனது சின்னமாக வைத்திருந்தும், கமலுக்கு பார்வைக் கோளாறு உள்ளதோ? என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.;

Update:2019-05-05 11:49 IST
சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்  தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- 

புயல் தொடர்பாக எச்சரிக்கை விடுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தையோ, உயிரை பணயம் வைத்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள பேரிடர் வீரர்களையோ கமல் பாராட்டவில்லை, புயல் வரும் முன்பே ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்த பிரதமரையும் பாராட்ட மனம் இல்லாமல் மௌனியாக இருக்கும் கமல், ஒடிசா முதல்வரை மட்டும் பாராட்டுவது பாரபட்சமானது என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்