தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.;
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-
தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு கோவை, ஈரோடு, திண்டுக்கல், தேனி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறி உள்ளது.