தூத்துக்குடியில் 13 பேர் பலியான நினைவு தினம்: ‘ஓராண்டு ஆகியும் மறையாத நெஞ்சை உலுக்கிய துப்பாக்கி சத்தம்’ காயம் அடைந்தவர்கள் உருக்கமான பேட்டி
“தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து ஓராண்டாகியும், நெஞ்சை உலுக்கிய அந்த துப்பாக்கி சத்தம் நினைவில் இருந்து மறையாமல் வடுவாக உள்ளது” என்று காயம் அடைந்தவர்கள் உருக்கமாக கூறினர்.;
தூத்துக்குடி,
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே 22-ந்தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த சென்றவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தில் 13 பேர் இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இது தொடர்பாக 244 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 277 பேர் கைது செய்யப்பட்டனர். சிலரை தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை முதலில் சி.பி.சி.ஐ.டி.க்கும், பின்னர் சி.பி.ஐ.க்கும் மாற்றப்பட்டது. தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
துப்பாக்கி சூடு சம்பவத்தின் நினைவு தினமும் இன்று (புதன்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த விஜயகுமார் (வயது 25) கூறியதாவது:-
நான் தூத்துக்குடியில் உள்ள தனியார் மணல் கம்பெனியில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தேன். கடந்த ஆண்டு நடந்த துப்பாக்கி சூட்டில் எனது வலது கால் தொடை பகுதியில் குண்டு பாய்ந்தது. பலத்த காயம் அடைந்த நான் ஓராண்டாக படுத்த படுக்கையாக இருந்தேன். அரசு தந்த ரூ.5 லட்சம் நிவாரணத்தொகைக்கு அதிகமாகவே எனது சிகிச்சைக்காக செலவு செய்து உள்ளேன். தற்போதுதான் நான் ‘வாக்கர்’ மூலம் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.
துப்பாக்கி சூடு சம்பவத்தை என்னால் மறக்க முடியவில்லை. கண் மூடி தூங்கினாலும் நினைவுக்கு வருகிறது. நெஞ்சை உலுக்கிய அந்த துப்பாக்கி சத்தம் நினைவில் இருந்து மறையாமல் வடுவாக உள்ளது. அரசு சார்பில் எனக்கு தலையாரி வேலை அளித்தனர். எனக்கு நடப்பதில் சிரமம் இருப்பதால், அமர்ந்து வேலை செய்யும் வகையில் அரசு ஏதேனும் பணியை வழங்கினால் நன்றாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த சேர்மராஜ் (24) கூறியதாவது:-
நான் ஒரு தனியார் எண்ணெய் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். கடந்த ஆண்டு மே 22-ந் தேதி மக்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுக்க சென்றபோது, போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் என்னை போன்று பலர் படுகாயம் அடைந்தனர். எனக்கு வலது கால் மூட்டு பகுதியில் துப்பாக்கி குண்டு துளைத்தது. இதனால் நான் கடந்த ஓராண்டாக நடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் இதுவரை முழுமையாக குணமடையவில்லை.
எனக்கு நாகர்கோவிலில் அறுவை சிகிச்சை நடந்தது. முதுகில் இருந்து எலும்பை எடுத்து மூட்டுப்பகுதியில் வைத்து அறுவை சிகிச்சை செய்தனர். இது குணமாக தாமதம் ஆகும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். எனக்கு அரசு தரப்பில் ரூ.5 லட்சம் நிவாரணமும், சமையல் உதவியாளர் வேலையும் தந்தனர். ஆனால் என்னால் அந்த வேலையை செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் என்னை போன்ற துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கும் தரமான சிகிச்சை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.