27 பவுன் நகை திருடிய வழக்கு; மேலும் ஒருவர் கைது

வீட்டின் பூட்டை உடைத்து 27 பவுன் நகை திருடிய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-10-26 00:15 IST

கூடலூர், 

கூடலூர் மங்குழி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் கடந்த 7-ந் தேதி உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதனால் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினர் ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தனர். இதை பயன்படுத்தி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அங்கு பீரோவில் இருந்த 27 பவுன் நகைகளை திருடி சென்றனர். இதுதொடர்பாக கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கேரள மாநிலம் மானந்தவாடி பகுதியை சேர்ந்த லதா (வயது 38), அவரது மகன் மனு (21) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தொடர்ந்து திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய கேரளாவை சேர்ந்த மது (27) என்பவரை தேடி வந்தனர். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த மதுவை கூடலூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்