ஈரோட்டில்மகாமாரியம்மன் கோவில் திருவிழா
ஈரோட்டில் மகாமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.;
ஈரோடு பெரியசேமூரில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பொங்கல் திருவிழா கடந்த 24-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து கோவிலில் கம்பம் நடப்பட்டது. அதைத்தொடர்ந்து தினமும் பெண்கள் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி வழிபட்டு வருகிறார்கள். நேற்று பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. வருகிற 31-ந் தேதி மாலை 6 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், 1-ந் தேதி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.வருகிற 2-ந் தேதி காலை 7 மணிக்கு கம்பம் பிடுங்கப்படுகிறது. இரவு 10 மணிக்கு நடக்கும் மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.