கிணற்றில் தவறி விழுந்த கன்றுக்குட்டி உயிருடன் மீட்பு
கிணற்றில் தவறி விழுந்த கன்றுக்குட்டி உயிருடன் மீட்பு;
பெருந்துறை
பெருந்துறையை அடுத்த துடுப்பதி அருகே தொட்டியநாய்க்கனூரில் உள்ள செல்வராஜ் என்பவரது தோட்டத்தில் 2 வயதுடைய எருமை கன்றுக்குட்டி ஒன்று நேற்று காலை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது கன்றுக்குட்டி அருகே உள்ள 70 அடி ஆழமுடைய சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டது. கிணற்றில் 40 அடி உயரத்துக்கு தண்ணீர் இருந்தது. இதனால் தண்ணீரில் கன்றுக்குட்டி தத்தளித்து கொண்டிருந்தது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்றனர். பின்னர் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி காயமின்றி கன்றுக்குட்டியை உயிருடன் மீட்டனர்.