வக்கீலை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
உளுந்தூர்பேட்டையில் வக்கீலை தாக்கிய 3 பேர் மீது வழக்கு;
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை கீரனூர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு என்கிற செல்வகுமார்(வயது 30). வக்கீலான இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த சூர்யா, சந்தோஷ்குமார் மற்றும் சதீஷ் ஆகிய 3 பேரும் அவரை வழிமறித்து ஆபாசமாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து செல்வகுமார் கொடுத்த புகாரின் பேரில் சூர்யா உள்பட 3 பேர் மீதும் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.