குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழச்சி

கொம்மடிக்கோட்டை பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழச்சி நடைபெற்றது.;

Update:2022-11-07 00:15 IST

தட்டார்மடம்:

சாத்தான்குளம் ஒன்றியம் தட்டார்மடம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை சு.சந்தோச நாடார் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் தர்மேந்திரராஜ் தலைமை தாங்கினார்.

தமிழாசிரியர் பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிளாரன்ஸ் கலந்து கொண்டு போக்சோ சட்டம் குறித்து எடுத்துரைத்தார்.

கொம்மடிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராஜ புனிதா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு செல்போனால் ஏற்படும் பிரச்சினை குறித்து பேசினார். வட்டார வளமைய பயிற்றுநர்கள் சோபா மற்றும் விஜயன், கொம்மடிக்கோட்டை பள்ளி ஆசிரியர்கள், பயிற்சி ஆசிரியர்கள,் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்