ரூ.1¼ லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

பரமத்திவேலூரில் ரூ.1¼ லட்சத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.;

Update:2023-04-12 00:15 IST

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் நேற்று தேங்காய் ஏலம் நடைபெற்றது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு ஆயிரத்து 735 கிலோ தேங்காயை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.25.20-க்கும், குறைந்தபட்சமாக ரூ.19-க்கும், சராசரியாக ரூ.24-க்கும் ஏலம் நடைபெற்றது. மொத்தம் ரூ.17 ஆயிரத்து 624-க்கு ஏலம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு ஆயிரத்து 5 ஆயிரத்து 641 கிலோ தேங்காயை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக தேங்காய் கிலோ ஒன்று ரூ.23.10-க்கும், குறைந்தபட்சமாக ரூ.13.10-க்கும், சராசரியாக ரூ.23-க்கும் ஏலம் நடைபெற்றது. மொத்தம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 789-க்கு ஏலம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்