300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
ஸ்ரீபெரும்புதூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறை சார்பில் 300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடைபெற்றது.;
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறை சார்பில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட 20 ஊராட்சிகளுக்குட்பட்ட 300 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ, செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மனோகரன் கலந்து கொண்டு 300 கர்ப்பிணிகளுக்கு சேலை, பூ, பழம், தேங்காய் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்தினர். இதில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மோனிஷா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.