தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்; 2 பேர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம் ரோட்டில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் ரோந்து வந்த போது சங்கரன்கோவிலை சேர்ந்த சங்கர நாராயணன் (வயது 45)மற்றும் தங்கராஜ் (42) ஆகிய 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது 10 கிலோ எடையுள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள், ரொக்கம் ரூ.6 ஆயிரத்து 950-ஐ பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்தனர். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.