போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மரணம்

போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மரணம்

Update: 2022-10-01 20:02 GMT

தஞ்சையை அடுத்த மருங்குளம் நால்ரோட்டை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் கடந்த 1993-ம் ஆண்டு போலீஸ்துறை பணியில் சேர்ந்தார். தற்போது தஞ்சை கீழவாசல் போக்குவரத்து விசாரணை பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று வழக்கம்போல் பணிக்கு வந்தார்.

மதியம் நேரத்தில் பணியில் இருந்தபோது ரவிச்சந்திரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே சக போலீசார் அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரவிச்சந்திரன் இறந்தார். இதையடுத்து ரவிச்சந்திரன் உடலுக்கு போலீஸ் அதிகாரிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Tags:    
Show comments

மேலும் செய்திகள்