செஞ்சி அரசு மருத்துவமனையில் கணினி நுண்கதிர் பிரிவு
செஞ்சி அரசு மருத்துவமனையில் கணினி நுண்கதிர் பிாிவை அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்.;
செஞ்சி:
செஞ்சி அரசு மருத்துவமனையில் கணினி நுண்கதிர் பிரிவு தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு கணினி நுண் கதிர் பிரிவை தொடங்கி வைத்தார். எக்ஸ்ரே பிரிவு அண்ணாதுரை வரவேற்றார். விழாவில் செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார், பேரூராட்சி தலைவர் மொக்தியார் மஸ்தான், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் நெடுஞ்செழியன், சுப்பிரமணி, இளம்வழுதி, டாக்டர்கள் பாலகோபால், அஜிதா, வர்த்தக சங்க தலைவர் செல்வராஜ், கலியமூர்த்தி, ரோட்டரி சங்க தலைவர் பாஸ்கர், ஜெரால்டு பொதுக்குழு மணிவண்ணன், தலைமை செவிலியர் ஷாகிராபானு, கவுன்சிலர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.