பாஜகவிலிருந்து விலகிய திலிப் கண்ணன், அதிமுகவில் இணைந்தார்

கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து அதிமுகவில் அவர் இணைந்தார்.;

Update:2023-03-07 12:17 IST

சென்னை,

பாஜகவின் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளராக இருந்த திலிப் கண்ணன் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில் திலிப் கண்ணன் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார்.

சென்னை ,கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து அதிமுகவில் அவர் இணைந்தார்.

சமீபத்தில், பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார்,எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்