'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-10-01 20:01 GMT

குடிநீர் குழாய் சரி செய்யப்படுமா?

தளவாய்புரம் அருகே உள்ள முகவூர்-சேத்தூர் மெயின் ரோட்டில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு அடிக்கடி குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலைகளும் சேதம் அடைந்து வருகிறது. எனவே குடிநீர் குழாய்கள் இனி வரும் காலங்களில் உடைப்பு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும்

கவிதா, தளவாய்புரம்.

அரசு பஸ் இயக்கப்படுமா?

சிவகாசியில் உள்ள பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள், அச்சங்களில் பணியாற்ற வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து பெரும்பாலான தொழிலாளர்கள் வந்து செல்கிறார்கள். இவர்கள் குறைந்த கட்டணத்தில் அரசு பஸ்களில் வந்து செல்வதை அதிகம் விரும்புகிறார்கள். ஆனால் வத்திராயிருப்பு பகுதியில் இருந்து சிவகாசிக்கு நேரடியாக பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. இதை தவிர்த்து வத்திராயிருப்பு, எம்.புதுப்பட்டி, செங்கமலநாச்சியார்புரம் வழியாக சிவகாசிக்கு அரசு பஸ்கள் இயக்க மாவட்ட போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகன், வத்திராயிருப்பு.

அணையின் ஷட்டர் சரி செய்யப்படுமா?

ஆனைக்குட்டம் அணையின் ஷட்டர் பழுது காரணமாக அணையில் இருந்து தண்ணீர் வெளியேறிவிடுகிறது. மழைக்காலம் தொடங்கும் முன்னர் ஆனைக்குட்டம் அணையின் ஷட்டரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும். முத்துக்குமார், ஆனைக்குட்டம்

குவியும் குப்பை

மதுரை ரெயில்வே பீடர் ரோடு இருபுறமும் உள்ள வாருகாலில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சண்முகம், விருதுநகர்,

குண்டும் குழியுமான சாலை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மம்சாபுரம் வழியாக ராஜபாளையம் பஸ் நிலையம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது..எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செந்தில், ஸ்ரீவில்லிபுத்தூர்.


Tags:    
Show comments

மேலும் செய்திகள்