இந்தி திணிப்பு எதிர்ப்பு துண்டுபிரசுரம் வினியோகம்

கடலாடியில் தி.மு.க. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு துண்டுபிரசுரம் வினியோகிக்கப்பட்டது.;

Update:2022-11-05 00:15 IST

சாயல்குடி,

கடலாடி பகுதியில் தெற்கு தி.மு.க. ஒன்றிய கழகம் சார்பில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, கடலாடி தி.மு.க. தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மாயகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். முன்னாள் கடலாடி ஒன்றிய துணை சேர்மன் பத்மநாதன், நகர செயலாளர் ராமசாமி, நகர் பொருளாளர் முனியசாமி, தெற்குஒன்றிய இளைஞரணி முரளிதரன், ஏ.புனவாசல் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் அம்மாவாசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி ஆப்பனூர் குருசாமி, ஒன்றிய தொண்டர் அணி திருமூர்த்தி, தேரங்குளம் லிங்கம் உள்ளிட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளைக்கழக செயலாளர் பங்கேற்றனர். கடலாடி வடக்கு ஒன்றியம் சார்பில் ஆப்பனூர், பொதிகுளம், ஒருவானந்தல் இளஞ்செம்பூர், தேவர் குறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இந்தி திணிப்பு எதிர்ப்பு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சிக்கு கடலாடி வடக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஆப்பனூர் ஆறுமுகவேல் தலைமை தாங்கினார். வக்கீல் அரிச்சந்திரன், ஒன்றிய இளைஞரணி மாரிநாதன், தகவல் தொழில்நுட்ப அணி பழனிவேல் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலாடி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்