மோட்டார் சைக்கிள் மோதி ஆட்டோ டிரைவர் சாவு
பர்கூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி ஆட்டோ டிரைவர் பலியானார்.;
பர்கூர்:
திருப்பத்தூர் மாவட்டம் கிட்டபையனூர் பகுதியை சேர்ந்தவர் நந்திகேசவன் (வயது 25). ஆட்டோ டிரைவர். இவர் பர்கூர்-திருப்பத்தூர் சாலை மல்லப்பாடி அடுத்த முச்சானிமேடு பகுதி அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இந்த விபத்தில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.