மகளிர் சுயஉதவிக்குழு தயாரிப்பு பொருட்கள் கண்காட்சி
மகளிர் சுயஉதவிக்குழு தயாரிப்பு பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.;
தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் வேலூர் மாவட்டம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழு தயாரிப்பு பொருட்களின் விற்பனை கண்காட்சி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், வேலூர், காட்பாடி, கே.வி.குப்பம், அணைக்கட்டு, குடியாத்தம், பேரணாம்பட்டு உள்ளிட்ட ஒன்றியங்களை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுவினர் தயாரித்த பனை ஓலைகளால் செய்யப்பட்ட பொருட்கள், கயிற்றால் உருவாக்கப்பட்ட பொருட்கள், அரிசி வகைகள், பாய்கள், தேன், தின்பண்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இடம் பெற்றிருந்தன. இவற்றை கலெக்டர் அலுவலகம் மற்றும் குறைதீர்வு கூட்டத்துக்கு வந்த ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். இந்த கண்காட்சி வாரந்தோறும் திங்கட்கிழமையன்று நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.