தொழில் முனைவோர்களுக்கான அரசு மானிய கடன் கருத்தரங்கு

பாவூர்சத்திரத்தில் தொழில் முனைவோர்களுக்கான அரசு மானிய கடன் கருத்தரங்கு நடந்தது.;

Update:2022-11-08 00:15 IST

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரத்தில் உள்ள சென்ட்ரல் அரிமா சங்க வளாகத்தில் தொழில் முனைவோர்களுக்கான அரசு மானிய கடன் குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு அரிசி ஆலை அதிபர் லட்சுமி சேகர் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் பொன்.அறிவழகன், தொழில் அதிபர் கோல்டன் செல்வராஜ் ஆகியோர் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினர். அரிசி ஆலை உரிமையாளர் கே.ஆர்.பி. இளங்கோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

கருத்தரங்கில் தென்காசி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பி.மாரியம்மாள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மானிய திட்டங்கள், வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சான்றிதழ்கள் பெற மானியம் வழங்கும் திட்டம், சுய உதவி குழு, தையல், அழகு நிலையம், கைத்தொழில் செய்பவர்களுக்கு ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது குறித்து பேசினார். கருத்தரங்கில் சொந்த தொழில் நடத்துவோர், சிறு, குறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பரமசிவன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்