சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை கனமழை...!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை கனமழை பெய்தது.;

Update:2022-11-08 07:39 IST

சென்னை,

இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூரும். இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைபெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை கனமழை பெய்தது. எழும்பூர், புரசைவாக்கம், கிண்டி, சைதாபேட்டை, மாம்பலம், சூளைமேடு, கோடம்பாக்கம், நூங்கம்பாக்கம், மாம்பலம், ஈக்காட்டுத்தாங்கல் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை கனமழை பெய்தது.

Tags:    

மேலும் செய்திகள்