தமிழகத்தின் 10 இடங்களில் சதமடித்த வெயில்

தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Update: 2024-05-10 14:23 GMT

சென்னை,

தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக சாலை ஓரத்தில் உள்ள கடைகளில் பழச்சாறுகள், தர்பூசணி, பழ வகைகள், கரும்பு சாறு, இளநீர் போன்றவற்றை பருகி இளப்பாறி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தின் 12 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவான இடங்கள்;

* ஈரோடு - 104 டிகிரி பாரன்ஹீட்

* வேலூர் - 104 டிகிரி பாரன்ஹீட்

* மதுரை விமான நிலையம் - 104 டிகிரி பாரன்ஹீட்

* திருச்சி - 104 டிகிரி பாரன்ஹீட்

* திருத்தணி - 102 டிகிரி பாரன்ஹீட்

* கரூர் பரமத்தி - 102 டிகிரி பாரன்ஹீட்

* தஞ்சாவூர் - 102 டிகிரி பாரன்ஹீட்

* நாமக்கல் - 101 டிகிரி பாரன்ஹீட்

* சேலம் - 101 டிகிரி பாரன்ஹீட்

* திருப்பத்தூர் - 100 டிகிரி பாரன்ஹீட் 

Tags:    

மேலும் செய்திகள்