தூத்துக்குடியில் ஆட்டோவில் பேட்டரி திருடியவர் கைது

தூத்துக்குடியில் ஆட்டோவில் பேட்டரி திருடியவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-11-05 00:15 IST

தூத்துக்குடி நந்தகோபாலபுரத்தை சேர்ந்தவர் பாலகணபதி. இவருடைய மகன் சின்னத்துரை (வயது 37). ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் இவர் வீட்டின் முன்பு ஆட்டோவை நிறுத்தி இருந்தாராம். அப்போது யாரோ மர்ம ஆசாமி ஆட்டோவில் இருந்த பேட்டரியை திருடி சென்றுவிட்டாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்வநாயகபுரத்தை சேர்ந்த பாலமுருகன் (52) என்பவர் பேட்டரியை திருடியது தெரியவந்தது. உடனடியாக போலீசார் பாலமுருகனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்