ரெயிலில் அடிபட்டு பெண் சாவு

தஞ்சை அருகே ரெயிலில் அடிபட்டு பெண் பரிதாபமாக இறந்தார். யார் அவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update:2023-03-03 01:16 IST

தஞ்சை அருகே ரெயிலில் அடிபட்டு பெண் பரிதாபமாக இறந்தார். யார் அவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரெயிலில் தண்டவாளத்தில் பிணம்

தஞ்சையை அடுத்த குளிக்கரை- கொரடாச்சேரிக்கு இடையே ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று காலை பெண் ஒருவர் கை, கால்கள் துண்டான நிலையில் பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தஞ்சை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் குமார், சுரேஷ், ஏட்டு சரவணசெல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டனர்.

போலீசார் விசாரணை

அப்போது அங்கு பிணமாக கிடந்த பெண்ணுக்கு 65 வயது இருக்கும். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? என தெரியவில்லை.

இதையடுத்து அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்