காதல் திருமணம் செய்த தம்பதி தற்கொலை முயற்சி

பொள்ளாச்சி அருகே காதல் திருமணம் செய்த தம்பதி தற்கொலை முயற்சி செய்தனர். இதற்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2022-11-05 00:15 IST

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே காதல் திருமணம் செய்த தம்பதி தற்கொலை முயற்சி செய்தனர். இதற்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காதல் திருமணம்

கேரள மாநிலம் குட்டிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் சாகுல் அமீது(வயது 25). பொள்ளாச்சியை அடுத்த வடக்கிபாளையம் அருகே கோவிந்தனூரில் தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ்வரி(19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த ஓராண்டுக்கு மேலாக இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது.

இதற்கிடையில் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்துக்கு பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை மீறி கடந்த ஆகஸ்டு மாதம் சாகுல் அமீதுவும், விக்னேஷ்வரியும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கோவிந்தனூரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

தற்கொலை முயற்சி

இந்த நிலையில் நேற்று முன்தினம் புதுமண தம்பதி திடீரென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். வீட்டில் மயங்கி கிடந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வடக்கிபாளையம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், சாகுல் அமீதுவுக்கு வயிற்றில் கட்டி இருப்பதும், சிகிச்சை எடுத்தும் வலி அதிகமானதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து மனைவியுடன் தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்