சேலம் சுகவனேசுவரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா-நாளை நடக்கிறது

சேலம் சுகவனேசுவரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நாளை நடைபெறுகிறது.;

Update:2023-02-17 03:06 IST

சுகவனேசுவரர் கோவில்

சேலத்தில் பிரசித்திபெற்ற சுகவனேசுவரர் கோவிலில் நாளை (சனிக்கிழமை) மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது. நாளை மாலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை வரை சிவ வழிபாடு நடக்கிறது. இதையொட்டி பாரம்பரிய கலை, கலாசாரம் மற்றும் ஆன்மிகம் சார்ந்த சொற்பொழிவுகளும் பக்தி இசையும், நாட்டிய நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. நாளை இரவு 8 மணிக்கு முதல் கால பூஜை, சாமிக்கு அபிஷேகம் மற்றும் தங்ககவசம் சாத்துப்படி நடக்கிறது. இரவு 11 மணிக்கு 2-ம் கால பூஜையும், சாமிக்கு புஷ்ப அலங்காரமும், நள்ளிரவு 1.30 மணிக்கு 3-ம் கால பூஜையும், சாமிக்கு தாழம்பூ சாத்துப்படியும் நடக்கிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால பூஜையும், சாமிக்கு சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.

சமூக வலைத்தளங்களில் ஒளிபரப்பு

சுகவனேசுவரர் கோவிலில் நடைபெறும் பூஜை உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் யு-டியூப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஒளிபரப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் செயல் அலுவலர் சரவணன் தெரிவித்தார்.

மேலும் மாநகர் மற்றும் புறநகரில் உள்ள சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நாளை இரவு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இதே போல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தாரமங்கலம் கைலாசநாதர் உள்பட பல்வேறு சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்