வேப்பமரத்தில் பால் வடிந்தது
குத்தாலம் அருகே வேப்பமரத்தில் பால் வடிந்தது மஞ்சள், குங்குமம் பூசி பக்தர்கள் வழிபட்டனர்;
குத்தாலம்:
குத்தாலம் அருகே சோழம்பேட்டை கிராமத்தில் ஒருவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள வேப்ப மரத்தில் நேற்று காலை திடீரென பால் வடிந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் அங்கு குவிந்து வேப்பமரத்தில் பால் வடிந்ததை பக்தி பரவசத்துடன் பார்த்தனர். தொடர்ந்து கிராம மக்கள் ஒன்றிணைந்து வேப்ப மரத்திற்கு குங்குமம், மஞ்சள் பூசி தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். ஐப்பசி மாத பவுர்ணமி தினமான நேற்று வேப்ப மரத்தில் பால் வடிந்ததால் அதை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.